தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குளக்கரைகளில் குப்பை உடனே தடுக்க வேண்டும் இந்த தப்பை

குளக்கரைகளில் குப்பை உடனே தடுக்க வேண்டும் இந்த தப்பை

குளக்கரைகளில் குப்பை உடனே தடுக்க வேண்டும் இந்த தப்பை


UPDATED : நவ 27, 2026 04:52 PM

ADDED : நவ 27, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 04:52 PM ADDED : நவ 27, 2026 04:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள குளக்கரைகளில் குப்பை கொட்டுவதால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன.

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், உக்குளம், நரசாம்பதி, கோளராம்பதி, வேடபட்டி புதுக்குளம், சொட்டையாண்டி குட்டை, பேரூர் பெரியகுளம் உள்ளிட்ட குளங்கள் உள்ளன. இக்குளங்களில், நீண்ட நாட்களுக்குப்பின், தற்போதுதான் கணிசமான அளவு நீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் வேடபட்டி பேரூராட்சிக்குட்பட்ட நரசாம்பதி, கோளராம்பதி குளக்கரைகளிலும், பேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பேரூர் பெரியகுளம், சொட்டையாண்டி குட்டையின் கரைகளிலும், தாளியூர் பேரூராட்சிக்குட்பட்ட வேடபட்டி புதுக்குளத்தின் கரைகளிலும், குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன.

இதனால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன; மண்வளமும் பாதிக்கப்படுகிறது. இதனை வேடிக்கை பார்க்கும் பேரூராட்சி நிர்வாகங்கள், மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம் விதித்து, இந்த அவலம் தொடர்ந்து நடப்பதை தடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us