தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குப்பையானது பேட்டரி வாகனங்கள் துாய்மைப்பணியில் நீடிக்கும் சிக்கல்

குப்பையானது பேட்டரி வாகனங்கள் துாய்மைப்பணியில் நீடிக்கும் சிக்கல்

குப்பையானது பேட்டரி வாகனங்கள் துாய்மைப்பணியில் நீடிக்கும் சிக்கல்


UPDATED : நவ 12, 2026 03:54 PM

ADDED : நவ 12, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 03:54 PM ADDED : நவ 12, 2026 03:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரமடை: காரமடை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 40,000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வார்டுகளில் மக்கும் மக்காத குப்பை சேகரிக்க 2 ஆண்டுக்கு முன், சிறிய அளவில் 24 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டன. அதில் 14 வண்டிகள் செயல்பாட்டில் உள்ளன. பல மாதங்களாக 10 வண்டிகள் செயல்படாமல், குப்பைக்கு போகும் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

வாகனங்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிப்பதில் சிக்கல் எழுநதுள்ளது. 14 வண்டிகளை வைத்து 27 வார்டுகளில் குப்பை சேகரிக்கும் நிலை உள்ளது.

காரமடை அரங்கநாத சுவாமி கோயிலுக்கு அன்றாடம் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.

சனிக்கிழமைகளிலும் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நகராட்சி அலட்சியத்தால் குப்பை பல பகுதிகளில் தேங்கிக்கிடக்கிறது.

பேட்டரி வாகனங்கள் நிலை குறித்து நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், 24 பேட்டரி வண்டிகளில் 10 வண்டிகளில் பேட்டரி பிரச்னை ஏற்பட்டது. வந்த பேட்டரிகளை சரிசெய்ய ஹைதராபாத் எடுத்துச்சென்றனர். 10 மாதம் காலம் ஆகிவிட்டது. ஆனாலும் சரிசெய்து திரும்ப ஒப்படைக்கவில்லை கேட்டுக்கு கொண்டே இருக்கிறோம், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us