தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குப்பையை அள்ளாமல் வைக்கிறார்கள் தீ!

குப்பையை அள்ளாமல் வைக்கிறார்கள் தீ!

குப்பையை அள்ளாமல் வைக்கிறார்கள் தீ!


UPDATED : ஜூன் 08, 2026 08:29 PM

ADDED : ஜூன் 08, 2026 08:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2026 08:29 PM ADDED : ஜூன் 08, 2026 08:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

1.தெருவிளக்கு எரியவில்லை காளப்பட்டி 6வது வார்டு ஆலயம் அவென்யூவில், 10 மின் விளக்குகளும் எரிவதில்லை. அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

- சண்முகம்: 2. குப்பை குவியல் மலுமிச்சம்பட்டி வெற்றி விநாயகர் ரெசிடென்ஸி பகுதியில் குப்பை குவிந்து கிடக்கிறது. காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் குப்பைத்தாள்கள் ஒட்டுகின்றன.

-ஜெயராமன்: 3. ஒளிரா விளக்கு மாநகராட்சி 38வது வார்டு டான்சா நகர் பகுதியில் மின்விளக்குகள் பல மாதங்களாக எரிவதில்லை. இரவில் கடந்து செல்ல அச்சமாக உள்ளது.

-ராஜ்குமார்: 4. ரோட்டில் குழி துடியலூர் - வெள்ளக்கிணறு ரோட்டில், துடியலூர் ரயில்வே கேட் அருகே பெரும் பள்ளங்கள் உள்ளன. வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.

-ராஜா: 5. குப்பை குவியல் சரவணம்பட்டி வார்டு எண் 4க்கு உட்பட்ட கே.ஜி.லே அவுட் அருகில் குப்பை மூட்டைகளாக குவிந்து கிடக்கின்றன. நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

- சீனிவாசன் சரவணம்பட்டி: 6. குப்பை மூட்டை உக்கடம் புல்லுக்காடு பகுதியில், நீண்டகாலமாக குப்பை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

- ரமேஷ்: 7. குப்பைக்கு தீ நஞ்சுண்டாபுரம் ரோடு கோல்டன் நகர் பகுதியில் ரோட்டிலேயே குப்பை எரிக்கப்படுவதால் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.

- நமச்சிவாயம்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us