/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாய்பாபா காலனி வீதிகளில் ஆங்காங்கே குப்பை; யார் செய்கிறார்கள் இந்த தப்பை?
/
சாய்பாபா காலனி வீதிகளில் ஆங்காங்கே குப்பை; யார் செய்கிறார்கள் இந்த தப்பை?
சாய்பாபா காலனி வீதிகளில் ஆங்காங்கே குப்பை; யார் செய்கிறார்கள் இந்த தப்பை?
சாய்பாபா காலனி வீதிகளில் ஆங்காங்கே குப்பை; யார் செய்கிறார்கள் இந்த தப்பை?
ADDED : மார் 31, 2025 11:25 PM

சாலை நடுவே 'போர்'
கோவை மாநகராட்சி, 20வது வார்டு, பிபிசி காலனி செல்லும் பிரதான சாலையில், போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. சாலை நடுவே இருக்கும் பைப்பால் விபத்து நடக்கிறது. இரவு நேரங்களில் பைப் தெரியாமல், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
- சுவிசேஷ், கணபதி.
மின்விபத்து அபாயம்
காந்திமாநகர், பீளமேடு வாட்டர் போர்டு அலுவலகம் எதிரில், மின் ஒயர்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், விரைந்து ஒயர்களை சீரமைக்க வேண்டும்.
- தங்கவேல், காந்திமாநகர்.
உடைந்த இருக்கைகள்
பி.என்.புதுார் பேருந்து நிறுத்தத்தில் உள்ள, பேருந்து நிலைய இருக்கை பழுதடைந்துள்ளது. இருக்கைகள் உடைந்து தரையோடு படுத்த நிலையில் உள்ளது. இதனால், பயணிகள் உட்கார முடியாமல், நின்றபடி காத்திருக்கின்றனர்.
- சிவக்குமார், பி.என்.புதுார்.
போக்குவரத்திற்கு இடையூறு
செல்வபுரம், எல்.ஐ.சி., காலனி விரிவாக்கம், டி2 காவல் நிலையம் அருகே செயல்படும் கார் ஒர்க் ஷாப்பில், பழுது பார்க்க வரும் வாகனங்களை, சாலையின் இருபுறமும் நிறுத்துகின்றனர். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
- ராதிகா, செல்வபுரம்.
வீணாகும் குடிநீர்
வடவள்ளி, ஸ்ரீ தட்சா யஹ்வி குடியிருப்பு அருகே, குடிநீர் குழாய் உடைந்து பெருமளவு தண்ணீர் சாக்கடையில் வீணாகிறது. புகார் செய்தும் நடவடிக்கையில்லை. கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.
- சின்னுச்சாமி,
வடவள்ளி.
மண்ணில் புதையும் சக்கரங்கள்
துடியலுார், கணுவாய் ரோடு, ஒன்றாவது வார்டுக்குட்பட்ட, பாதாள சாக்கடை பணிக்கு பின், சாலையை சீரமைக்கவில்லை. சமீபத்தில் லாரியின் சக்கரம் ஒன்று சாலையில் புதைந்துவிட்டது. இதுபோல, தினமும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
- ராஜசேகரன்,
துடியலுார்.
சேதமடைந்த நடைபாதைகள்
போத்தனுார், ரயில் நிலையம் முதல் ரயில் திருமண மண்டபம் வரை, நடைபாதை சிலேப்புகள் உடைந்துள்ளன. பாதசாரிகள் தடுமாறி விழுகின்றனர். நடைபாதை சிலேப்புகளை விரைந்து சரிசெய்து தர, பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை.
- பாலன், போத்தனுார்.
குழந்தைகளுக்கு ஆபத்து
ராமநாதபுரம், ரெட்பீல்டஸ், நிர்மலா மெட்ரிக் பள்ளி அருகே பாதாள சாக்கடை சிலேப் உடைந்து குழியாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குழியில் விழுவதற்கு வாய்ப்புள்ளது. விபத்துகள் நடக்கும் முன் சிலேப்பை மூட வேண்டும்.
- ராஜாராம்,
ராமநாதபுரம்.
தீப்பற்ற வாய்ப்பு
சாய்பாபாகாலனி, கே.கே.புதுார், ராமலிங்க நகர், மூன்றாவது வீதியில் சாலையோரம் மரக்குப்பை குவித்து வைக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் மரக்குப்பையில் எளிதில், தீப்பற்ற வாய்ப்புள்ளது. இது தவிர, தெருக்களில் ஆங்காங்கே குவிந்துள்ள குப்பையை அகற்ற வேண்டும்.
- கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்க நகர்.
கடும் துர்நாற்றம்
புலியகுளம், 64வது வார்டு, போலீஸ் கந்தசாமி வீதியில், சாக்கடை கால்வாய் சுற்றுச்சுவர், பல இடங்களில் இடிந்துள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி, குட்டை போல தேங்கியுள்ளது. கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. குடியிருப்பு பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- சேகர், புலியகுளம்.