செயல்படாத குவாரி குழியில் குப்பை குவித்து தீ வைப்பு
செயல்படாத குவாரி குழியில் குப்பை குவித்து தீ வைப்பு
UPDATED : அக் 29, 2026 10:35 PM
ADDED : அக் 29, 2026 10:32 PM

கிணத்துக்கடவு: வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட செயல்படாத கல்குவாரியில், குப்பை கொட்டி தீ வைத்து எரித்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, வடபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் தனி நபர் ஒருவர், கல்குவாரி நடத்தினார். இந்த குவாரி உரிமம் கடந்த, 2024ம் ஆண்டுடன் முடிந்தது. அதன்பின், இங்கு முறையான கம்பி வேலி அமைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன், குவாரியில் மூட்டை மூட்டைகளாக பிளாஸ்டிக் மற்றும் இதற்கு கழிவை மர்ம நபர்கள் கொட்டி சென்றனர். இந்நிலையில், நேற்று அந்த குப்பைக்கு தீ வைத்து எரித்துள்ளனர். இதை கண்ட மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
மக்கள் கூறியதாவது:
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பல குவாரிகள் விதிமீறி செயல்பட்டு வந்தது. இந்த குவாரி உரிமம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. குவாரி குழியில் தற்போது மர்ம நபர்கள் குப்பை மூட்டை மூட்டையாக குவித்து உள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குப்பைக்கு தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. அருகில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவுகளை அகற்றவில்லை. மேலும், இது ரசாயன கழிவா அல்லது சாதாரண கழிவா என தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
