/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோரம் மூட்டை மூட்டையாக குப்பை :சுற்றுப்புறத்தில் சுகாதார சீர்கேடு
/
சாலையோரம் மூட்டை மூட்டையாக குப்பை :சுற்றுப்புறத்தில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் மூட்டை மூட்டையாக குப்பை :சுற்றுப்புறத்தில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் மூட்டை மூட்டையாக குப்பை :சுற்றுப்புறத்தில் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 09, 2025 11:29 PM

குவியும் குப்பை சிறுவாணி மெயின் ரோடு, சுண்டப்பாளையம், ஈஸ்வரா மில் அருகே சாலையோரத்தில் மூட்டை, மூட்டையாய் குப்பை கொட்டப்படுகிறது. பெருமளவு தேங்கியுள்ள குப்பை கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுப்புறம் முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
- அஜய்: நாய்களால் தொல்லை வெள்ளக்கிணறு, இரண்டாவது வார்டு, சவுடாம்பிகா நகர், ராகவேந்திரா கார்டனை சுற்றியுள்ள அனைத்து வீதிகளிலும், சுமார் 15 தெரு நாய்கள் சுற்றுகின்றன. பைக்கில் வருவோரை நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- ராஜா: கடும் துர்நாற்றம் கோணவாய்க்கால்பாளையம், வெள்ளலுார் ரோடு, கிருஷ்ணா கோயில் அருகில், சாக்கடை ஒரு மாதமாக சுத்தம் செய்யவில்லை. கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் இருப்பதால், குடியிருப்பு பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கடும் துர்நாற்றமும் வீசுகிறது.
- பாலாஜி: போக்குவரத்து நெருக்கடி மரப்பாலம் ரயில்வே மேம்பால பணியால், கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள், மதுக்கரை ரோட்டில் திருப்பி விடப்படுகின்றன. நடராஜ் மருத்துவமனை மற்றும் அடுத்துள்ள சுரங்கப்பாதை அருகே காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வரிசையாக வராமல் எதிர்திசையில் வாகனங்கள் தாறுமாறாக வருவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
- ராஜசேகர்: மூடப்படாத குழியால் நெருக்கடி சத்தி மெயின் ரோடு, சரவணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில், காஸ் பைப் லைனுக்காக தோண்டப்பட்ட குழி, பல மாதங்கள் ஆகியும் சரிசெய்யவில்லை. பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளதால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
- முருகேசன்: சாலையில் ஓடும் கழிவுநீர் மாநகராட்சி, 81வது வார்டு, தாமஸ் வீதியில் இருந்து ரங்கே கவுடர் வீதி செல்லும் வழியில், பாதாள சாக்கடை நிரம்பி சாலை நடுவே வழிகிறது. வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்வோர் மீது தெறிக்கிறது. இதனால், அருகில் உள்ள வீராசாமி முதலியார் பள்ளி வளாகத்திலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- ஹரிதாஸ்: அடிக்கடி விபத்து சிங்காநல்லுார் பேருந்து நிலையம் எதிரில், இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய்க்காக குழி தோண்டப்பட்டது. சரிவர குழியை மூடாததால், அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது. மழைக்காலத்தில் வாகனங்களை ஓட்டவும், நடந்து செல்லவும் சிரமமாக உள்ளது.
- செந்தில்குமார்: மின்ஒயரில் சாய்ந்த மரம் மாநகராட்சி, 55வது வார்டு, ஜி.கே.டி. நகர், பாப்பநாயக்கன்பாளையம், 'எஸ்.பி -58 பி -15' என்ற எண் கொண்ட கம்பத்தின் ஓயர்கள் மீது, பெரிய மரம் சாய்ந்த நிலையில் உள்ளது. மரம் விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நடராஜன்: சகதியான ரோடு வெள்ளலுார், சக்தி விநாயகர் நகரில் இருந்து, எமதர்மன் கோயில் செல்லும் அம்மன் நகரில், குடிநீர் மற்றும் காஸ் லைனுக்காக தோண்டிய குழிகள் சரிசெய்யப்படவில்லை. இரண்டு வருடங்களாக தார் சாலை வசதி அமைக்கக் கோரியும் நடவடிக்கையில்லை. மண் சாலையில் தேங்கும் மழைநீரால் ரோடு சேறும், சகதியுமாக உள்ளது.
- தீபக் சரவணன்: இரவில் விபத்து தொண்டாமுத்துார், சுண்டப்பாளையம், காஸாகிராண்ட் குடியிருப்பு பகுதியில் சாலையில் ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக சாலையில் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இது, வாகனஓட்டிகளுக்கு சிரமமாக இருப்பதுடன், விபத்திற்கும் காரணமாக உள்ளது.
- அகர்வால்:

