/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுக்கடை பகுதியில் குவியும் குப்பையால் தவிப்பு
/
மேட்டுக்கடை பகுதியில் குவியும் குப்பையால் தவிப்பு
ADDED : மார் 23, 2025 11:10 PM
அன்னுார், : குன்னத்துார் புதுார் ஊராட்சி, மேட்டுக்கடை பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு வீடுகள் மற்றும் பொது குழாய்களுக்கு குடிநீர் சப்ளை செய்யும் மேல்நிலைத் தொட்டி உள்ளது.
இந்த தொட்டியின் கீழ் பகுதியில் தினமும் மூட்டை மூட்டையாக குப்பை கொட்டப்படுகிறது. பொதுமக்களும், ஊராட்சி நிர்வாகமும், குப்பை கொட்டுகிறது. இதனால் இங்கு சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
குடிநீர் தொட்டியின் கீழ் குப்பை கொட்டுவதை தவிர்த்து, குப்பையை உடனுக்குடன் சேகரித்து திடக்கழிவு மேலாண்மை கிடங்குக்கு கொண்டு செல்ல வேண்டும். இங்கு தேங்கியுள்ள குப்பையை அகற்ற வேண்டும்.
'இதுகுறித்து குன்னத்துார் புதுார் ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை,' என மேட்டுக்கடை பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.