தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பூண்டு விலை உயர்வு

பூண்டு விலை உயர்வு

பூண்டு விலை உயர்வு


ADDED : ஆக 16, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: பூண்டு விலை உயர்ந்து கிலோ ரூ.320 வரை விற்பனையானது.

நீலகிரி மாவட்டத்தில் பயிர் செய்யப்படும் வெள்ளைப் பூண்டு, மேட்டுப்பாளையத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட பூண்டு மண்டிகளில் ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஏலம் நடைபெறும்.

நேற்று நடந்த ஏலத்தில் பூண்டு விலை அதிகரித்து ஏலம் போனது.

மேட்டுப்பாளையம் பூண்டு மண்டி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:

ஏலத்திற்கு, 60 ஆயிரம் மூட்டை வெள்ளைப் பூண்டு வரத்து இருந்தது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 300க்கு மேற்பட்ட வியாபாரிகள், ஏலத்தில் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்ட வெள்ளைப் பூண்டை, வெளி மாநில வியாபாரிகள், விதைக்காக மட்டுமே வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ பூண்டு குறைந்தபட்சம், 150 ரூபாய்க்கும், முதல் தரமான பூண்டு அதிகபட்சம், 320 ரூபாய்க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட, கிலோவுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. வரும் வாரங்களில் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us