/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூண்டு கிலோ ரூ.436க்கு விற்பனை
/
பூண்டு கிலோ ரூ.436க்கு விற்பனை
ADDED : செப் 23, 2024 12:12 AM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் மேட்டுப்பாளையம் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி மாவட்டத்தில் உற்பத்திசெய்யப்படும் உருளைக்கிழங்குகள், பூண்டுகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. உருளைக்கிழங்குகள் தினசரி ஏலம் விடப்படுகிறது. பூண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.
கூடலுார், கேத்தி, குன்னுார், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் பூண்டு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க அதிகாரிகள் கூறுகையில், ''நீலகிரி விவசாயிகள் கொண்டு வந்த பூண்டு, ஏலம் விடப்பட்டது. அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ. 436க்கு ஏலம் போனது. கடந்த ஒரு மாதமாக ஒரு கிலோ ரூ.400க்கு மேல் ஏலம் போகிறது. நேற்று விற்பனை கூடத்திற்கு சுமார் 50 கிலோ கொண்ட 30க்கும் மேற்பட்ட பூண்டு மூட்டைகள் வந்தன,'' என்றனர்.