தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காஸ் சிலிண்டர் பயன்படுத்துதல் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

காஸ் சிலிண்டர் பயன்படுத்துதல் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

காஸ் சிலிண்டர் பயன்படுத்துதல் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி 


ADDED : ஆக 23, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: மடத்துக்குளம் அருகேயுள்ள காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் காஸ் சிலிண்டர் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

இளம் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சையது முகமது குலாம்  தஸ்தகீர் வரவேற்றார்.

இந்தியன் காஸ் அலுவலக உதவியாளர் குணசேகரன், காஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தும் போது மனதில் கொள்ள வேண்டிய வழிமுறைகள் மற்றும் காற்றில் காஸ் வாசனை வந்தால் எடுக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் தெளிவாக எடுத்து கூறினார்.

காஸ் கசிவு இருந்தால், 1906 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு அழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தமிழாசிரியர்  சிவராஜ், காஸ் சிலிண்டர்களை கையாளுவது குறித்து பேசினார். 

இடைநிலை ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியர் சம்பத்குமார் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us