/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்திய ஆட்டோமேஷன் தொழில்துறையின் முன்னோடி ஜனடிக்ஸ்
/
இந்திய ஆட்டோமேஷன் தொழில்துறையின் முன்னோடி ஜனடிக்ஸ்
இந்திய ஆட்டோமேஷன் தொழில்துறையின் முன்னோடி ஜனடிக்ஸ்
இந்திய ஆட்டோமேஷன் தொழில்துறையின் முன்னோடி ஜனடிக்ஸ்
ADDED : செப் 30, 2025 10:47 PM

ஜெ கநாதன் மற்றும் நாகேஸ்வரன் ஆகிய தொழில்நுட்ப வல்லுனர்களால் 1977ல் நிறுவப்பட்ட ஜனடிக்ஸ் (JANATICS) , இன்று உலகளாவிய தரத்தில் தொழில்நுட்பம், தரம் மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் பெயராக மாறியுள்ளது. இந்தியாவின் முன்னணி நியூமேடிக்ஸ் மற்றும் ஆட்டோமேசன் பொருட்கள் தயாரிப்பாளராக, ஜனடிக்ஸ் பல்வேறு துறைகளுக்கு தேவையான தயாரிப்புகளை தயாரித்து சிறப்பாக வழங்கி வருகிறது.1977-ல் ஒரு கனவாக தொடங்கியது, இன்று உலகளாவிய நிறுவனமாக வளர்ந்துள்ளது!
இன்றைய தொழில்துறைகள் பெரும்பாலும் மனிதர்களை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, இந்த நிலைமை வேகமாக மாறி வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதர்களை மையமாக கொண்டு தொழில்துறைகள் இயங்கி வந்த நிலை மாறிவருகிறது. தானியக்கமாக்கும் தொழில்நுட்பங்கள், குறிப்பாக குறைந்த செலவில் செயல்படும் நியூமேடிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் ஆட்டோமேஷன் தீர்வுகள், தொழில்துறையின் புதிய அடையாளமாக மாறுகின்றன.சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களும் தங்களது உற்பத்தி செயல்முறைகளை தானியக்கமாக்கும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த மாற்றத்தை சாத்தியமாக்கும் முக்கிய தொழில்நுட்பங்களாக மனிதர்களுடன் இணைந்து பாதுகாப்பாகவும் திறமையாகவும் செயல்படும் தானியக்க கருவிகள் ரோபோட் மற்றும் கோபாட், துல்லிய இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டிற்கு ஏற்ற மின்னியல் தீர்வுகளான எலக்ட்ரிக்கல் ஆக்சூயேட்டர்கள், சக்தி சேமிப்பு, செயல்திறன் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஏர் மேனேஜ்மெண்ட் சொல்யூசன்ஸ், பொருட்களை நுட்பமாக கையாளும், எளிதாக எடுத்துச் செல்லும் தொழில்நுட்பங்கள் வேக்கம் சிஸ்டம்ஸ் ஆகியவை உள்ளது.
இந்த தொழில்நுட்பங்களை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தி, செயல்படுத்துவதில் ஜனடிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன், 48 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம், தொழில்நுட்ப ஆழம் மற்றும் வாடிக்கையாளர் மையக் கண்ணோட்டம், இந்திய தொழில்துறையின் தானியக்க வளர்ச்சிக்கு வலுவான ஆதாரமாக உள்ளது.
தொழில்துறையில் நீடித்த நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக, ஜனடிக்ஸ் பல துறைகளில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. சர்வதேச தரச்சான்றுகள் பெற்ற நடைமுறைகள் வாயிலாக தரமான உற்பத்தி, தொழில்நுட்ப மேம்பாட்டில் தனித்துவமான ஆர் அன்ட் டி மையம் மூலம் தொடர்ச்சியான புதுமை, தொழில்நுட்ப ஆலோசனை, பயிற்சி மற்றும் சேவையில் கவனம் என சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு, இந்தியா முழுவதும் விரைவான மற்றும் நம்பகமான விநியோக வலையமைப்பு ஆகியவை ஜனடிக்சின் வலிமைகள் ஆகும்.
வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு நேர்த்தியான தீர்வுகளை வழங்குவதில் ஜனடிக்ஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ஐ.எஸ்.ஒ 9001:2015, ஐ.எஸ்.ஒ 14001:2015, ஐ.எஸ்.ஒ 45100:2018 சான்றிதழ்களுடன் சேவை செய்து வருகிறது. உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான இயந்திர உற்பத்தியாளர்களுக்கும் மாற்றுப் பயன்பாட்டு சந்தையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் தரமான சேவைகளை வழங்கும் மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது.
300க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் மூலம் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தாமதமின்றி கிடைக்கச் செய்கிறது. வாடிக்கையாளரின் தரமான உற்பத்திக்கும் உறுதுணையாக பங்காற்றி இன்று உலகச் சந்தையில் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக திகழ்கிறது. ஜனடிக்ஸ் என்பது இது ஒரு நிறுவனத்தின் பயணமல்ல, ஒரு தொழில்துறை புரட்சியாகும்.