/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரசவத்தில் சிக்கல் ஏற்படுத்தும் கர்ப்ப கால சர்க்கரை
/
பிரசவத்தில் சிக்கல் ஏற்படுத்தும் கர்ப்ப கால சர்க்கரை
பிரசவத்தில் சிக்கல் ஏற்படுத்தும் கர்ப்ப கால சர்க்கரை
பிரசவத்தில் சிக்கல் ஏற்படுத்தும் கர்ப்ப கால சர்க்கரை
ADDED : ஜன 16, 2025 11:43 PM

'சர்க்கரை பாதிப்புக்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கம் உள்ளிட்ட காரணங்கள் இருந்தாலும், பெண்களை தாக்கும் கர்ப்ப கால சர்க்கரை பாதிப்பு குறித்தும் தெரிந்திருப்பது அவசியமாகும்,' என்கிறார், கே.எம்.சி.எச்., சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷங்கர் தண்டபாணி.
அவர் கூறியதாவது:
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இன்சுலின் செயல்பாடு குறைந்து, ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதை சரிசெய்ய உடலில் இன்சுலினும் அதிகமாக சுரக்கும்.
இது ரத்த சர்க்கரையை சரியான அளவுக்கு கொண்டு வந்துவிடும். கர்ப்பிணிகளுக்கு இது இயல்பாக நிகழ்வதாகும். ஆனால், சிலருக்கு தேவையான அளவு இன்சுலின் சுரக்காது. ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அப்போது அவர்களுக்கு கர்ப்ப கால சர்க்கரை பாதிப்பு ஏற்படுகிறது.
குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை பாதிப்பு இருப்பது, உடல் பருமன், மிக தாமதமாக கர்ப்பம் தரிப்பது, சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, முந்தைய பிரசவத்தில் அதிக எடையுடன் குழந்தை பிறந்தது, போன்ற காரணங்களால், கர்ப்ப கால சர்க்கரை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருந்தால், குழந்தையின் எடை அதிகரித்து, பிரசவத்தில் சிக்கல் ஏற்படும். கர்ப்ப கால சர்க்கரையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். சர்க்கரையை கண்டறிய, 12 மற்றும் 26வது வாரத்தில், குளுக்கோஸ் டோலரன்ஸ் என்ற பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பாதிப்பு கண்டறியப்பட்டால், உணவு முறையில் மாற்றம், நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவற்றால், சர்க்கரை சீராக வாய்ப்புண்டு; சீராகவில்லை என்றால், டாக்டர் ஆலோசனைப்படி, இன்சுலின் எடுத்துக்கொண்டு, பிரசவத்துக்குப்பின் நிறுத்திவிடலாம். பெரும்பாலானோருக்கு பிரசவத்துக்குப்பின், ரத்த சர்க்கரை சரியாகிவிடும். கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் கர்ப்ப கால சர்க்கரை பாதிப்பை கண்டறியும் பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சைக்கு அனைத்து வசதிகளும் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, 733 9333 485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.