தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தீபாவளியை தித்திப்பாக்க தள்ளுபடியை அள்ளுங்க!

தீபாவளியை தித்திப்பாக்க தள்ளுபடியை அள்ளுங்க!

தீபாவளியை தித்திப்பாக்க தள்ளுபடியை அள்ளுங்க!


ADDED : அக் 31, 2026 07:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2026 07:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல கடைகளிலும் பொருட்கள் வாங்க தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதோ ஒரு பார்வை!



தி குரோசர் சென்ட்ரல்



இங்கு தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, வாங்கும் தொகைக்கு ஏற்ப இலவச பட்டாசு பரிசுப் பெட்டி வழங்கப்படுகிறது. 8 முதல் 10 ஆயிரத்திற்குள் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ரூ.1,200 மதிப்பிலான ‛கிட்ஸ் ஸ்பெஷல்’ பரிசும், 10 முதல் 12 ஆயிரத்திற்குள் வாங்குபவர்களுக்கு ரூ.2,300 மதிப்பிலான ‛சூப்பர் கிப்ட்’ பரிசும் வழங்கப்படுகிறது. 12 முதல் 15 ஆயிரத்திற்குள் வாங்குபவர்களுக்கு ரூ.2,700 மதிப்பிலான ‛கிளாமர்’ பரிசும், 15 முதல் 20 ஆயிரத்திற்குள் வாங்குபவர்களுக்கு ரூ.4,100 மதிப்பிலான ‛வொண்டர்’ பரிசும், 20 ஆயிரத்துக்கும் மேல் வாங்குபவர்களுக்கு ரூ.5,000 மதிப்பிலான ‛மெஜஸ்டிக்’ பரிசும் வழங்கப்படுகிறது. இன்று முதல் 8-ம் தேதி வரை இனிப்பு மேளாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து, ‛100 நாட்கள் - 100 பரிசுகள்’ என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் தீபாவளி விளையாட்டுகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கான பரிசு வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட் ஹோம்



தீபாவளி சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட சேஷம் மரக்கட்டில் வாங்குபவர்களுக்கு 1+4 இருக்கைகள் கொண்ட டைனிங் செட் இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சத்துக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 3 கதவு அலமாரி இலவசமாக வழங்கப்படுகிறது. மெத்தை வாங்கினால் கட்டில் இலவசம் என்ற சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மரத்தால் செய்யப்பட்ட கார்னர் சோபா, சென்டர் டேபிள் ரூ.25 ஆயிரத்துக்கு வழங்கப்படுகிறது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸஸ்



பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸஸில் முன்னணி நிறுவனங்களின் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், கேஜெட்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்.இ.டி., டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி., மிக்சி, கிரைண்டர், மைக்ரோவேவ் ஓவன், காஸ் ஸ்டவ், சிம்னி உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. தீபாவளி சிறப்பு விற்பனையில் கேஷ்பேக், லாயல்ட்டி பாயின்ட்ஸ், எளிய மாத தவணை வசதி, எக்சேஞ்ச் சலுகை மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. லேப்டாப், மொபைல், அதன் உபகரணங்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐடியல் ஸ்டோர்ஸ்



ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐடியல் ஸ்டோர்ஸில் சமையலறைக்குப் பயன்படும் நவீன வீட்டு உபயோகப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நவம்பர் 4 முதல் 14-ம் தேதி வரை தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறைந்த எண்ணெயில் உணவு தயாரிக்க உதவும் புதிய ஒன் செப் ஏர் ப்ரையர் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. இடியாப்பம் நுாடுல்ஸ் தயாரிக்கும் கருவி, இண்டக்ஷன் அடுப்பிலும் பயன்படுத்தக்கூடிய குழிப்பணியாரக் கல் ஆகியவையும் விற்பனைக்கு வந்துள்ளன. பிளாஸ்க் , கெட்டில் ஆகிய இரண்டின் பயன்பாட்டையும் ஒருங்கே கொண்ட புதிய சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எரிவாயுவைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் 74 சதவீத வெப்பத் திறன் கொண்ட காஸ் அடுப்பும் இடம்பெற்றுள்ளது. இவற்றின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாட்டு முறைகளை வாடிக்கையாளர்கள் நேரடியாகத் தெரிந்துகொள்ள செயல்விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன.

லுலு ஹைப்பர் மார்க்கெட்



தீபாவளியை முன்னிட்டு லுலு ஹைப்பர்மார்க்கெட்டில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல் போன்கள், எல்.இ.டி., டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணுப் பொருட்களுக்கு கேஷ்பேக் சலுகை, எளிய தவணை வசதி மற்றும் குறிப்பிட்ட வீட்டு உபயோகப் பொருட்களுக்கு இலவசமாக வீட்டுக்கே டெலிவரி செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இனிப்பு, கார வகைகளும் விற்பனைக்கு உள்ளன. இந்தச் சிறப்புச் சலுகை நவம்பர் 1-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே தள்ளுபடி பொருந்தும்.

சன்னி டைமண்ட்



தீபாவளியை முன்னிட்டு, மொத்தம் ரூ.5 கோடி மதிப்பிலான பரிசுகளை சன்னி டைமண்ட்ஸ் அறிவித்துள்ளது. ஒவ்வொரு நகை வாங்கும்போதும் நிச்சயப் பரிசு வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் மதிப்பிலான வைர நகை வாங்கும்போதும் 10 கிராம் வெள்ளி பரிசாக வழங்கப்படுகிறது. பழைய தங்கத்தை மாற்றும்போது, சவரனுக்கு ரூ.2,400 கூடுதல் மதிப்பும் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகைகள் நவம்பர் 15 வரை செல்லுபடியாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us