ADDED : செப் 29, 2026 08:45 PM
அ நிறம் | அளவு
கருமத்தம்பட்டி: தேவாங்கர் முன்னேற்ற அமைப்பு மற்றும் வாகராயம்பாளையம் பொதுமக்கள் சார்பில், 2026 ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, 60 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
தேவாங்கர் குல குரு சந்திர மவுலீஸ்வரர் சுவாமிகள் அருளாசி வழங்கினார். அமைப்பின் மாநில தலைவர் விஜய் மல்லையா, வாகை தலைவர் கணேசன், எஸ்.எஸ்.எம்., கல்லூரி தலைவர் மதிவாணன், இஸ்ரோ விஞ்ஞானி கல்பனா அரவிந்த், பிஎஸ்ஆர் சில்க்ஸ் நிறுவனர் ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பேசினர். மாவட்ட தலைவர் திருமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
