/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் குழந்தைகள் தினம்; பள்ளிகளில் கொண்டாட்டம்
/
பெண் குழந்தைகள் தினம்; பள்ளிகளில் கொண்டாட்டம்
ADDED : ஜன 24, 2025 10:44 PM

--- நிருபர் குழு -
பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில், தேசிய பெண்குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. உதவி தலைமையாசிரியர் ஜெகநாத ஆழ்வார்சாமி தலைமை வகித்தார்.
நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். ஆசிரியர் சுபத்ரா பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவி எண்கள் குறித்து விளக்கமளித்தார். பொருளியல் ஆசிரியர் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சுரேஷ்குமார் செய்திருந்தார். தொன்மை மன்ற ஆசிரியர் மலர்கண்ணு நன்றி தெரிவித்தார்.
பொள்ளாச்சி
* பொள்ளாச்சி அருகே புளியம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் சித்ரா, அறிவியல் ஆசிரியர் சண்முகசுந்தரி, தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்து பேசினர்.
மேலும், பெண்களின் சிறப்பு, பாதுகாப்பு, பெண் குழந்தைகள் கல்வியில் மேம்பாடு பெறுதல் குறித்து பேசினர். தொடர்ந்து, குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு
* நாடெங்கும், 2009ம் ஆண்டிலிருந்து, ஜனவரி 24ம் தேதியை, தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
* மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் தலைமை வகித்தார். இதில், பெண் குழந்தைகள் தினம் கொண்டாடுவதற்கான நோக்கம் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.
வழிபாட்டு கூட்டத்தில் 'மாணவர் மனசு' திட்டம் சார்ந்த விளக்கமும் கூறப்பட்டது. பாலியல் புகார் சார்ந்து ஏதேனும் தகவல் பெறப்பட்டால் அதை உடனடியாக, '14417' மற்றும் '1098' என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இணையதள பாதுகாப்பு மற்றும் அதன் தகவல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.
* நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவில், வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்விராணி, கிராம சுகாதார செவிலியர் உமா மகேஸ்வரி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், பெண் குழந்தைகள் தினம் குறித்தும், உடல் நலம் சார்ந்த கருத்துக்களும் மாணவர்களிடையேதெரிவிக்கப்பட்டது.