/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் ஜி.ஐ.எஸ்., தினம்
/
வேளாண் பல்கலையில் ஜி.ஐ.எஸ்., தினம்
ADDED : நவ 22, 2025 07:02 AM
கோவை: வேளாண் பல்கலையில், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் நிறுவனம் சார்பில் உலக 'புவியமைப்பு தகவல் முறைமை'( ஜி.ஐ.எஸ்.,) தினம் கொண்டாடப்பட்டது.
இயற்கை வள மேலாண்மை, சுற்றுச் சூழல் பகுப்பாய்வு, அறிவியல் ஆராய்ச்சியில் ஜி.ஐ.எஸ்., தாக்கம் குறித்து நடந்த இந்நிகழ்வில், டீன் ரவிராஜ், ஜி.ஐ.எஸ்., அடிப்படையிலான நீர்வள மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். நிலத்தடி நீர் கண்டறிதல், நிலையான நீர்வள மேலாண்மைக்கு ஜி. ஐ.எஸ்., சாதகங்களையும் விளக்கினார். மாநில வனப்பணிகளுக்கான மத்திய உயர் பயிற்சியக முதல்வர் திருநாவுக்கரசு பேசுகையில், காட்டுத் தீ கணிப்பு மற்றும் கட்டுப்பாடு, விலங்குகள் கண்காணிப்பு, காப்புக் காடுகள் திட்டமிடல் மற்றும் உயிரியல் வள பாதுகாப்பில் ஜி.ஐ.எஸ்., பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இரு பிரிவுகளில் மாணவர்கள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

