/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னைக்கு டானிக் கொடுத்தால் தேங்காய் மகசூல் அதிகரிக்கும்
/
தென்னைக்கு டானிக் கொடுத்தால் தேங்காய் மகசூல் அதிகரிக்கும்
தென்னைக்கு டானிக் கொடுத்தால் தேங்காய் மகசூல் அதிகரிக்கும்
தென்னைக்கு டானிக் கொடுத்தால் தேங்காய் மகசூல் அதிகரிக்கும்
ADDED : ஏப் 21, 2025 05:43 AM
மேட்டுப்பாளையம், : கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை தோட்டக்கலை கல்லூரியில், நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகள்'கிராமத்தங்கல்' திட்டத்தின் கீழ் சிறுமுகைப் பகுதியில் தங்கி உள்ளனர்.
இவர்கள் சிறுமுகை சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று, மகசூல் அதிகரிப்பது குறித்து எடுத்துரைத்து வருகின்றனர்.
சிறுமுகைப் பகுதியில் தென்னை நடவு செய்த விவசாயிகளுக்கு, தென்னை டானிக்கை வேர் வாயிலாக, செலுத்தும் செயல்முறையை, வேளாண் பல்கலை பேராசிரியர்கள் வழிகாட்டுதலின் பேரில், இந்த செய்முறை விளக்கத்தை மாணவிகள் செய்து காண்பித்தனர்.
தென்னை டானிக் பயன்படுத்துவதன் வாயிலாக, மட்டைகளின் எண்ணிக்கையும், இலைகளில் பச்சையத்தின் அளவும், பாளைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். குரும்பை கொட்டுதல் குறையும்.
தேங்காய்கள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பருப்பு எடை கூடும். பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று விவசாயிகளிடம் தெரிவித்தனர்.