/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண் கூச செய்யும் வாகன விளக்குகள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
கண் கூச செய்யும் வாகன விளக்குகள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கண் கூச செய்யும் வாகன விளக்குகள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கண் கூச செய்யும் வாகன விளக்குகள்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : நவ 28, 2025 05:25 AM

கோவை: கோவையில் பைக்குகள் முதல் அனைத்து விதமான வாகனங்களிலும் கண் கூச செய்யும் நவீன ரக பவர் புல் பல்புகள், எல்.இ.டி., பல்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இரவில் எதிரில் வருவது பைக்கா அல்லது நான்கு சக்கர வாகனமா என தெரியாத அளவுக்கு முகப்பு விளக்குகள் அதிக பிரகாசமாக ஒளிர்கின்றன.
தற்போது வெளிவரும் எல்.இ.டி., லைட்டுகளால், மிக அதிகளவில் ஒளிதரக்கூடியவையாக உள்ளன. இத்தகைய விளக்குகளில் இருந்து வரும், ஒளியால் விழித்திரை பாதிக்கப்பட்டு ஒரு சில வினாடிகள் பார்வை பாதிக்கப்படுகிறது. நகர எல்லைப்பகுதிக்குள் வாகனங்களை இயக்கும் போது 'லோ பீம்' பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், இவ்விதியை யாரும் பின்பற்றுவதில்லை. 'ஹை பீம்' வைத்தே வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதைத்தடுக்க போக்குவரத்து போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்,''மாநகரில் இதுபோன்ற அதிக ஒளி உமிழும் விளக்குகளை பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு பொருத்தப்பட்டிருந்தால், அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.
கோவை அரசு மருத்துவமனை கண் நோயியல் துறை தலைவர் சாந்தி கூறுகையில், ''கண்ணில் 'ராட்' மற்றும் 'கோன்' என இரு செயல்பாடுகள் உண்டு. வெளிச்சத்தில் இருந்து இருளுக்கு செல்லும் போது ராட் வேலை செய்து பார்வை திறனை கொடுக்கும். கோன், இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு செல்லும் போது தெளிவான பார்வையை வழங்கும்.
''திடீரென அதிக ஒளி கண்ணில் படும் போது இவ்விரு விசயங்களும் நடக்காது. கண் பார்வை ஒரு சில வினாடிகள் முற்றிலும் இருக்காது. மீண்டும் பழைய நிலைக்கு மீள ஒரு சில வினாடிகள் பிடிக்கும்,'' என்றார்.

