/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு கோ-கோ டி.கே.எஸ்., முதலிடம்
/
மாணவர்களுக்கு கோ-கோ டி.கே.எஸ்., முதலிடம்
ADDED : செப் 07, 2025 07:59 AM

கோவை: பள்ளி மாணவர்களுக்கான (14 வயதுக்கு உட்பட்ட) கோ-கோ போட்டி, சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்., மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், 12 அணிகள் பங்கேற்றன. அரையிறுதி போட்டியில், கே.வி.எம்., மெட்ரிக் பள்ளி, பி.எஸ்.ஜி.ஆர்.கே., பள்ளி, டி.கே.எஸ்., பள்ளி, சி.ஆர்.ஆர்., பள்ளி ஆகிய நான்கு அணிகள் இடம்பெற்றன.
'லீக்' முறையில் நடந்த போட்டிகளின் நிறைவில் மூன்று வெற்றிகளுடன் டி.கே.எஸ்., மெட்ரிக் பள்ளி அணி முதலிடம், இரண்டு வெற்றிகளுடன் பி.எஸ்.ஜி.ஆர்.கே., பள்ளி இரண்டாமிடம், ஒரு வெற்றியுடன் சி.ஆர்.ஆர்., மெட்ரிக் பள்ளி மூன்றாமிடம் பிடித்தன. நான்காமிடத்தை கே.வி.எம்., பள்ளி பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன.