/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கோ-கோ' உலக கோப்பை; இந்திய அணி தேர்வு
/
'கோ-கோ' உலக கோப்பை; இந்திய அணி தேர்வு
ADDED : டிச 12, 2024 05:57 AM

கோவை; கோவையை சேர்ந்த இரு வீரர்கள், 'கோ-கோ' உலகக் கோப்பை போட்டி தேர்வுக்கான தேசிய பயிற்சி முகாமுக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
'கோ-கோ' உலக கோப்பை முதல் 'சீசன்', அடுத்த ஆண்டு ஜன., மாதம் டில்லியில் நடைபெற உள்ளது. இதில், 24 நாடுகள், 6 கண்டங்களை சேர்ந்த, 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி சார்பில் விளையாடும் வீரர்கள் டில்லியில் உள்ள தேசிய கோ-கோ பயிற்சி முகாமில், போட்டி திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு நேற்று முதல் அடுத்தாண்டு ஜன., 11ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில், சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்திய அணிக்காக உலக கோப்பை போட்டியில் விளையாடுகின்றனர்.
கோவையில் உள்ள கல்லுாரியில், எம்.ஏ., ஆங்கிலம் பயிலும் சுப்ரமணி, பி.ஏ., ஆங்கிலம் பயிலும் சந்துரு ஆகியோர், தேசிய கோ-கோ பயிற்சி முகாமுக்கு தேர்வாகியுள்ளனர்.
இவர்கள், முதல் உலக கோப்பை இந்திய அணிக்கு தேர்வு பெற, சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதில், வீரர் சந்துரு, 4வது ஆசிய கோ-கோ சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணிக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.