/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்தையில் ஆடு விற்பனை மந்தம் நினைச்ச விலை கிடைக்கலீங்க!
/
சந்தையில் ஆடு விற்பனை மந்தம் நினைச்ச விலை கிடைக்கலீங்க!
சந்தையில் ஆடு விற்பனை மந்தம் நினைச்ச விலை கிடைக்கலீங்க!
சந்தையில் ஆடு விற்பனை மந்தம் நினைச்ச விலை கிடைக்கலீங்க!
ADDED : செப் 27, 2024 11:18 PM

பொள்ளாச்சி: புரட்டாசி மாதம் காரணமாக,பொள்ளாச்சி சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள், குறைந்த விலைக்கு ஏலம் போனதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரந்தோறும் வியாழக்கிழமை மாடு மற்றும் ஆட்டுச் சந்தை நடக்கிறது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள், நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டது.
ஆடுகளை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்று, வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகள் கொண்டு வரப்பட்டன. புரட்டாசி மாதம் என்பதால், கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் ஆடுகள் வரத்து குறைவாகவே இருந்தது. வியாபாரிகள் வருகையும் குறைந்ததால், ஆடுகளுக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்து வாங்கி சென்றனர்.
வியாபாரிகள் கூறியதாவது: இரு வாரத்துக்கு முன், 12 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு, 8 ஆயிரம் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரையிலும்; 25 கிலோ எடை கொண்ட ஆடு, 20 ஆயிரம் முதல், 22 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது.
ஆனால், நேற்று, மந்தமான விற்பனை காரணமாக, 25 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 15 ஆயிரம் முதல், 17 ஆயிரம் ரூபாய்; சராசரி எடை கொண்ட ஆடுகள், 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை விலையானது.
இவ்வாறு, கூறினர்.