தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒரு ரவுண்ட் போனால் ‘ரிலாக்ஸ்’ ஆகி விடலாம்

ஒரு ரவுண்ட் போனால் ‘ரிலாக்ஸ்’ ஆகி விடலாம்

ஒரு ரவுண்ட் போனால் ‘ரிலாக்ஸ்’ ஆகி விடலாம்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 03:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 03:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு விஷயத்தை வித்தியாசமாக செய்தால், ஊராரின் கண்கள் தானாகவே அதன் பக்கம் திரும்பும். இந்த சிம்பிள் லாஜிக்கை நம்ம ஊர்க்காரர்கள் கச்சிதமாக பிடித்துக்கொண்டனர்.

பிசினஸ் தொடங்குவதை விட, அதற்கு என்ன பெயர் வைக்கிறோம் என்பதில்தான் இப்போது நம்ம ஊர் இளசுகளின் முழு கிரியேட்டிவிட்டியும் அடங்கியிருக்கிறது.

சிட்டிக்குள் அப்படியே பைக் ரைடு போனபோது, கண்ணில் பட்ட சில பெயர் பலகைகள் நம்மை ஒரு கணம் திகைக்க வைத்தன. அப்புறம் ரசிக்க வைத்தன.

ஒரு வீதியின் வளைவில் திரும்பும்போது, 'வந்தால் வெட்டுவோம்' என ஒரு போர்டு மிரட்டியது.

'அடப்பாவிகளா, என்ன பட்டப்பகல்ல மிரட்டுறாங்க' என உற்றுப் பார்த்தால்... கீழே சின்னதாக, 'Just for hair cut' எனப் போட்டிருந்தார்கள்.

சலுானுக்கு முடி வெட்ட அழைக்கும் இந்த டெர்ரர் அழைப்பு, நம்ம கோயம்புத்தூர் குசும்புங்க.

ஒரு துணிக்கடைக்கு 'சொல்லக்கூடாது' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். எந்தக் கடையில் வாங்கினாய் என யாராவது கேட்டால், 'சொல்லக்கூடாது' என்று நீங்கள் சொன்னாலும் அது கடையின் விளம்பரம்தானே! எப்படி ஒரு மாஸ்டர் பிரெய்ன் பாருங்க.

கடிகாரம் ரிப்பேர் செய்யும் கடைக்கு 'டாப்டைம்' என கெத்தாக பெயர் சூட்டியிருக்கிறார்கள். சரி, கொஞ்சம் பசிக்கிறதே என திரும்பினால், பர்கர் கடைக்கு 'ஸ்மோக் ஸ்மேஷ்' (Smoke Smash) என பெயரிலேயே பசியை தூண்டுகிறார்கள்.

ஒரு மனிதனுக்கு உணவு, உடை, உறக்கம் இவை மூன்றும் சரியாக அமைந்தால்தான் வாழ்வில் நிம்மதி கிடைக்கும். இதற்காகவே ஒரு உணவகத்துக்கு 'ஓட்டல் நிம்மதி' என பெயர் வைத்திருக்கிறார்கள்.

நீங்களும் கோவை வீதிகளில் பயணம் செய்தால், போர்டுகளை கவனித்து பாருங்கள். ரிலாக்ஸ் ஆகி விடலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us