UPDATED : ஜூன் 01, 2026 09:24 PM
ADDED : ஜூன் 01, 2026 08:40 PM
அ நிறம் | அளவு
கோவை: டவுன்ஹால் வைசியாள் வீதியிலுள்ள, கன்னிகா பரமேஸ்வரி கோவில் சிலைகளின் நகையை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவில் பூசாரி, மே 31 அதிகாலை வழக்கம்போல் கோவிலை திறந்து பூஜைக்கான பணிகளை செய்தார். அப்போது வள்ளி, தெய்வானை சிலைகளில் இருந்த தலா 6 கிராம் எடையுள்ள தங்க சங்கிலிகள் காணாமல் போயிருந்தன.
கோவில் நிர்வாக தரப்பில் பஜார் போலீசாரிடம் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சி.சி.டி.வி., பதிவுகளை ஆராய்ந்து பார்த்தபோது, இந்திரா நகர் செந்தில் பிரபு, 45 என்பவர் சங்கிலிகளை திருடி சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்து நகையை மீட்டனர்.
