/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாதித்த 'தங்கங்களுக்கு' தங்க நாணயம் பரிசு
/
சாதித்த 'தங்கங்களுக்கு' தங்க நாணயம் பரிசு
ADDED : அக் 07, 2025 01:19 AM

கோவை;கோவை கோட்ட தபால் தொழிற்சங்கம் சார்பில், ஊழியர்களின் குழந்தைகளில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு, தங்க நாணயங்கள் பரிசளிக்கப்பட்டன.
நிர்வாகிகள் பால்ராஜ், ரமேஷ்குமார், கோபால், கிருஷ்ணன், சுஜித்ரா ஆகியோர் தலைமை வகித்தனர். வள்ளிநாயகி துவக்க உரையாற்றினார்.
எஸ்.எஸ்.குளத்தை சேர்ந்த சூர்யா, பூஜா, சின்னியம்பாளையம் கார்னிகா, பிரதிக்ஷா, ஆலாந்துறை தக்சிதா, அனன்யா, கே.கே.புதுார் ராகுல், ராம்நகர் நிவாஷ் ஆகியோருக்கு தங்க நாணயங்கள் பரிசளிக்கப்பட்டன.
பணி நிறைவு பெற்றோர், உயர்வு பெற்றோர், ரத்த கொடையாளர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் கலைவாணி பரிசளித்தார்.
பின், கோவை அஞ்சல் கோட்டத்தின் ஓய்வூதியர் மாநாடு, மாநில செயலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், மாநில சங்க ஆலோசகர் சுந்தரமூர்த்தி முன்னிலையிலும் நடந்தது.
தலைவராக வஜ்ரவேலு, செயலராக பிரபாகரன், பொருளாளராக குருசாமி உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஓய்வூதியர் சங்க மண்டல செயலர் சிவசண்முகம் அஞ்சல் மூன்று மாநில அமைப்பு செயலர் ஜீவா உட்பட பலர் பங்கேற்றனர்.