/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்க நகை கொள்ளை; 2 இளைஞர்கள் கைது
/
தங்க நகை கொள்ளை; 2 இளைஞர்கள் கைது
ADDED : ஜன 21, 2025 11:43 PM
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம், காரமடை அருகே குட்டையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, ஐந்தே முக்கால் சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கில், இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
காரமடை அருகே குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் சுமதி, 56. இவர் வெளியூர் சென்றபோது, பூட்டிய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஐந்தே முக்கால் சவரன் நகைகள் திருடப்பட்டன. காரமடை போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், திருப்பூரை சேர்ந்த முகமது ரபீக், 33 மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த ராமர், 28, ஆகியோர் தான் இதில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இவர்கள் இருவரும் நேற்றும் காரமடை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.---