/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு
/
தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு
ADDED : டிச 16, 2024 11:00 PM

கோவை; தங்கத்தின் விலை, ஒரு சில மாதங்களில், பவுன் 60 ஆயிரம் ரூபாய் தொடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
ஆபரணத்தங்கம் விலை, சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. சமீப காலங்களில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வதும், பின் சீராக இறங்குவதுமாக உள்ளது.
கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறுகையில், '' தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற பின், அவரது புதிய அறிவிப்புகளை பொறுத்து, சில அதிரடி மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கின்றோம். விலையில், ஏற்ற, இறக்கம் இருந்தாலும், தங்கத்தின் விலை அதிகரிக்கத்தான் செய்யும். மூன்று, நான்கு மாதங்களில் ரூ.60 ஆயிரத்தை தொடும் என நம்புகிறோம்,'' என்றார்.