நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், தங்கத்தேர் அமைக்கும் பணி கடந்த வாரம் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தங்க தேரோட்ட விழா வருகிற பிப். 1ம் தேதி தைப்பூச நாளன்று மாலை 6:45 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவையாதினம் குமரகுருபர சுவாமிகள், மடாதிபதிகள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள், திருமுருகன் வழிபாட்டு அறக்கட்டளை, திருமுருகன் அருள் நெறிக் கழகம் சார்பில் செய்யப்படுகிறது.
பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் கோவிலில் கட்டணம் செலுத்தி, தங்க தேரை உட்பிரகாரத்தில் வடம் பிடித்து இழுக்கலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

