/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் பொன் விழா கொண்டாட்டம்
/
ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் பொன் விழா கொண்டாட்டம்
ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் பொன் விழா கொண்டாட்டம்
ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் பொன் விழா கொண்டாட்டம்
ADDED : மே 08, 2025 12:59 AM

கோவை; ஜி.கே.என்.எம்., மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் இருதய அறுவை சிகிச்சை துறையின் பொன்விழா கொண்டாட்டம், மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது.
இருதய சிகிச்சையில், 50 ஆண்டு கால சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அத்துறை சார்பில் இதய வடிவிலான சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜி.கே.என்.எம்., மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி கூறுகையில், ''இந்த குறிப்பிடத்தக்க சின்னம், இதயம் சார்ந்த பிரச்னைகளை கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதில் சிறந்து விளங்குவதற்கான எங்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது,'' என்றார்.
இக்கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, வரும், 10 மற்றும், 11ம் தேதிகளில், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வரும் முன்னணி மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
குப்புசாமி நாயுடு அறக்கட்டளை துணைத் தலைவர் கோபிநாத், அறங்காவலர் ஆதித்ய கிருஷ்ணா பதி, இருதயவியல் மற்றும் இருதய அறுவை சிகிச்சை துறையின் மருத்துவர்கள். அறுவை சிகிச்சை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஊழியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.