ADDED : ஜூலை 02, 2026 04:57 AM

அ நிறம் | அளவு
காந்திபார்க்: பாரம்பரிய தங்க நகை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாத்தல், குறைந்தபட்ச ஊதிய முறையை அமல்படுத்துதல், நல வாரிய பணப்பயன்களை இரட்டிப்பாக்குதல், ஓய்வூதியத் தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தங்க நகை தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்திபார்க் பகுதியில் கோயமுத்தூர் தங்க நகை தொழிலாளர் யூனியன், -சி.ஐ.டி.யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்கள் குடும்பத்தோடு பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். பொது செயலாளர் சந்திரன், பொருளாளர் மருதன், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வேலுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
