/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி!
/
மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி!
மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி!
மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி!
ADDED : அக் 03, 2024 12:07 AM
கோவை : தமிழகத்தில் வீடுகளுக்கு, 15 நாட்களிலும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, 30 நாட்களிலும் மின் இணைப்பு வழங்கப்படும். அதே போல், விவசாய பயன்பாட்டிற்காக தட்கல் திட்டத்தில் மின் இணைப்புகள், துரிதமாக வழங்கப்படும் என்று, மின்வாரியம் அறிவித்தது.
அதன்படி, 5 எச்.பி.,க்கு ரூ.2.5 லட்சமும், 7.5.எச்.பி.,க்கு ரூ.2.75 லட்சமும், 10 எச்.பி.,க்கு ரூ.3 லட்சமும், 15 எச்.பி.,க்கு ரூ.4 லட்சமும் என, மின் வாரியம் கட்டணம் நிர்ணயித்தது. கட்டணம் செலுத்திய, சில நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதை நம்பி, ஏராளமான விவசாயிகள் கடன் வாங்கி, விவசாய மின் இணைப்பு பெற, தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் கோவையில் 10,000 விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
2,417 தட்கல் இணைப்புகளும், பிற வகையில் தயார் நிலையிலான மின் இணைப்புகள் 7,551 என்று சுமார், 10,000 பேர் மின் இணைப்பு பெறாமல், கடந்த இரண்டாண்டுகளாக காத்திருக்கின்றனர்.
இது பற்றி கோவை கலெக்டர் அலுவலகத்தில், நடக்கும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்களில் புகார் தெரிவித்தும், எந்த பலனும் இல்லை.
இந்நிலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மந்திராசலம் தலைமையிலான விவசாயிகள், கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் குப்புராணியை சந்தித்து, இப்பிரச்னை குறித்து விவாதித்தனர்.
அதற்கு அவர் அளித்த பதில்:
நடப்பாண்டு மார்ச் 31 வரை, தட்கல் திட்டத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு, மின் இணைப்பு கொடுப்பதற்கான அரசு உத்தரவு, இரண்டொரு நாளில் வந்துவிடும். அதன் பின் மின் இணைப்பு கொடுத்து விடுவோம்.
அதே போல், அனைத்து அரசு திட்டங்களுக்கான மின் இணைப்புகளையும் கொடுக்கச்சொல்லி, உத்தரவு வந்துள்ளது; அவற்றையும் கொடுத்து விடுவோம்.
சாதாரண மின் திட்டத்தில், 25,000 மற்றும் 50,000 ரூபாய் செலுத்தி காத்திருப்போர் தயார்நிலையில் ( ரெடினெஸ்) தேதி குறிப்பிட்டவர்களுக்கும், மின் இணைப்பு வழங்க அறிவுறுத்தி, உத்தரவுகள் தயாராகி வருகின்றன; வந்தவுடன் கொடுத்து விடுவோம்.
இவ்வாறு, குப்புராணி கூறியுள்ளார்.