/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலத்துக்கு நல்ல வரவேற்பு
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலத்துக்கு நல்ல வரவேற்பு
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலத்துக்கு நல்ல வரவேற்பு
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலத்துக்கு நல்ல வரவேற்பு
ADDED : டிச 12, 2025 05:14 AM
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரம் தோறும் செவ்வாயன்று தேங்காய் ஏலமும், புதன்கிழமை பாக்கு ஏலமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், முதன்முறையாக பாக்கு ஏலம் நடந்தது. சோதனை முறையில் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில், விவசாயிகளும், வியாபாரிகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஏலத்தில், பச்சை பாக்கு ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், பழப்பாக்கு 65 ரூபாய்க்கும், வரக்காய், 181 ரூபாய்க்கும், சாளி பாக்கு 390 ரூபாய்க்கும் விற்பனையானது. 106.62 கிலோ எடையுள்ள பாக்கு, மொத்தம், 27,755 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த தொகை, நேரடியாக அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. சோதனை முறையில் நடத்தப்பட்ட பாக்கு ஏலத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், வாரந்தோறும் புதன்கிழமை, தொண்டாமுத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பாக்கு ஏலம் தொடர்ந்து நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.