/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பஸ் ஊழியர்களுக்கு 'பிரீத் அனலைசர்' சோதனை; போக்குவரத்து கழகம் நடவடிக்கை
/
அரசு பஸ் ஊழியர்களுக்கு 'பிரீத் அனலைசர்' சோதனை; போக்குவரத்து கழகம் நடவடிக்கை
அரசு பஸ் ஊழியர்களுக்கு 'பிரீத் அனலைசர்' சோதனை; போக்குவரத்து கழகம் நடவடிக்கை
அரசு பஸ் ஊழியர்களுக்கு 'பிரீத் அனலைசர்' சோதனை; போக்குவரத்து கழகம் நடவடிக்கை
ADDED : ஜன 22, 2025 07:47 PM

பொள்ளாச்சி ; அரசு போக்குவரத்து கழக, கிளைகளில் இருந்து பஸ் 'செட் அவுட்' செய்யப்படும்போது, டிரைவர், கண்டக்டர்களுக்கு, 'பிரீத் அனலைசர்' சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனி பஸ் ஸ்டாண்டில், கடந்த, 17ம் தேதி, ஊட்டி மண்டலம், மேட்டுப்பாளையம் 2வது கிளையைச் சேர்ந்த, டி.என்.38 என் 2936 எண் கொண்ட அரசு பஸ் நின்று கொண்டிருந்தது. அந்த பஸ்சின் டிரைவர், மதுபோதையில் இருந்ததாக, பயணியர் புகார் அளித்தனர். அதன்பேரில், ஆய்வு செய்து, அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல, ஈரோடு மண்டலம், ஈரோடு 1வது கிளையைச் சேர்ந்த டி.என். 33 என் 3562-ல் பணி புரிந்த டிரைவர், 'செட் அவுட்' செய்து, பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் விபத்தை ஏற்படுத்தினார். ஆய்வு நடத்தியதில், அவர் மது அருந்தி விட்டு பஸ்சை ஓட்டியதும் தெரிந்தது.
இந்நிலையில், அனைத்து, கிளைகளில் இருந்தும், பஸ்சை 'செட்அவுட்' செய்யும்போது, டிரைவர், கண்டக்டரிடம் மது வாடை இல்லாததை உறுதி செய்து, வழித்தடத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு போக்குவரத்து கழக, கோவை மேலாண்மை இயக்குனர், கோவை, ஊட்டி, ஈரோடு, திருப்பூர் கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கிளையை விட்டு பஸ் 'செட்அவுட்' ஆகும்போது, பாதுகாவலர்கள் பஸ்சை ஆய்வு செய்வது மட்டுமின்றி, டிரைவர், கண்டக்டர் இருவரையும் தனது அருகில் வைத்து, சந்தேகத்துக்கு இடமின்றி கண்காணிக்க வேண்டும்.
அதேபோல, பணியில் உள்ள பொறியாளர்களும், 'செட் அவுட்' செய்ய வரும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பாதுகாப்பான இயக்கம் தொடர்பாக அறிவுரைகள் வழங்க வேண்டும். மது வாடை இல்லாத நிலையை உறுதி செய்த பின்னரே, வழித்தடத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.
இதேபோல, முக்கிய பஸ் ஸ்டாண்டில் பணிபுரியும் அலுவலர்கள், தணிக்கையாளர்களும், டிரைவர், கண்டக்டர்களிடம் மது வாடை இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் அதிகாலை, மதியம், மாலையில் பஸ் 'செட் அவுட்' செய்யப்படும்போது, வாரத்திற்கு ஒரு முறையாவது, 'பிரீத் அனலைசர்' கருவி வாயிலாக டிரைவர் மற்றும் கண்டக்டர்களை பரிசோதிக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டு உள்ளது.