/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பஸ் மீண்டும் இயக்கம் 'தினமலர்' செய்தி எதிரொலி
/
அரசு பஸ் மீண்டும் இயக்கம் 'தினமலர்' செய்தி எதிரொலி
அரசு பஸ் மீண்டும் இயக்கம் 'தினமலர்' செய்தி எதிரொலி
அரசு பஸ் மீண்டும் இயக்கம் 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : டிச 09, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: அன்னூரில் இருந்து கரியாம்பாளையம், கெம்பநாயக்கன் பாளையம், கதவுகரை, பெரிய புத்தூர் வழியாக காரமடைக்கு, 25ம் எண் அரசு டவுன் பஸ் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது.
சாலை மோசமாக இருந்ததால், ஆறு மாதங்களுக்கு முன் டவுன் பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, சாலை சரி செய்யப்பட்டது. அதன் பின்னரும் டவுன் பஸ் இயங்கவில்லை. இதனால் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் தவித்தனர்.
இது குறித்து கடந்த 4ம் தேதி நமது நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது மீண்டும் பஸ் இயக்கப்படுகிறது. மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.