/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கேபிள் டி.வி., எச்.டி.,செட்டாப் பாக்ஸ் செயல்விளக்கம்
/
அரசு கேபிள் டி.வி., எச்.டி.,செட்டாப் பாக்ஸ் செயல்விளக்கம்
அரசு கேபிள் டி.வி., எச்.டி.,செட்டாப் பாக்ஸ் செயல்விளக்கம்
அரசு கேபிள் டி.வி., எச்.டி.,செட்டாப் பாக்ஸ் செயல்விளக்கம்
ADDED : டிச 16, 2024 12:09 AM
கோவை; கோவையில், அரசு கேபிள் டி.வி., எச்.டி., செட்டாப் பாக்ஸ் குறித்து, கேபிள் ஆபரேட்டர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழக அரசு கேபிள் டி.வி., இணைப்புகளுக்கு, எஸ்.டி., செட்டாப் பாக்சிற்கு பதிலாக, எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்க வேண்டும் என்று , அரசு கேபிள் ஆபரேட்டர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, எச்.டி., செட்டாப் பாக்ஸ் வழங்க அரசு முடிவு செய்தது.
கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட கேபிள் டி.வி., ஆபரேட்டர்களுக்கு வழங்குவதற்கு கன்டெய்னர் லாரியில் எச்.டி., பாக்ஸ் கொண்டு வரப்பட்டு, அன்னுாரிலுள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் கேபிள் ஆபரேட்டர்களுக்கு, விநியோகம் செய்யப்பட உள்ளது.
கோவை சத்தி ரோடு, ஆம்னி பேருந்து நிலையம் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி., நிறுவன அலுவலகத்தில் நேற்று முன் தினம் இரவு, எச்.டி., செட்டாப் பாக்ஸ் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆபரேட்டர்களுக்கு எச்.டி., பாக்சை காட்சிபடுத்தி, அவற்றை பயன்படுத்துவது தொடர்பாக, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.