/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம்
/
அரசு கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம்
ADDED : அக் 18, 2024 10:15 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, அரசு கலை அறிவியல் கல்லுாரியில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனை சார்பில், ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார், டாக்டர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ரத்த தானம் செய்தனர்.
தொடர்ந்து, 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான அனைவரும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். உரிய கால இடைவெளியில் ரத்த தானம் செய்வதால், உடலில் புதிய செல்கள் உருவாகி உடல் நலன் காக்கப்படும்.
அரசு ரத்த மையங்கள் மற்றும் ரத்த தான முகாம்களில் தன்னார்வமாக ரத்த தானம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாயகி, அலுவலர்கள் சந்திரசேகர், பத்மப்பிரியா, பிரேமா, சுபா, அருண்கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

