/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தை மாற்ற அரசு ஊழியர்கள் சங்கம் வேண்டுகோள்
/
மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தை மாற்ற அரசு ஊழியர்கள் சங்கம் வேண்டுகோள்
மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தை மாற்ற அரசு ஊழியர்கள் சங்கம் வேண்டுகோள்
மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தை மாற்ற அரசு ஊழியர்கள் சங்கம் வேண்டுகோள்
ADDED : டிச 30, 2024 12:08 AM
கோவை; அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்துள்ள நிறுவனத்தை, மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, கோவை மாவட்ட நிர்வாகிகள் பிலால்மக்துாம், சிவானந்தம், மாசானம் ஆகியோர் தமிழக முதல்வர் மற்றும் தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள, மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு ஊழியர்களின் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில், கட்டணமில்லா சிகிச்சைக்கு பதில் பேக்கேஜ் அடிப்படையில் காப்பீட்டுத்தொகை வழங்கி வருகிறது. காப்பீட்டு நிறுவனம் செய்யும் மோசடிகளுக்கு, தமிழக அரசு உடந்தையாக உள்ளது.
அரசாணைப்படி, வரும் ஜூன் 30ம் தேதியோடு காப்பீட்டுத்திட்டம் நிறைவடைகிறது. அதனால் புதுப்பிக்கும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
ஆனால், அரசு ஊழியர்களிடம் விருப்புரிமை கோரவில்லை. இது ஜனநாயக உரிமை மறுப்பு மட்டுமல்ல. தார்மீக ரீதியாக தவறான நடவடிக்கை.
அதே போல் என்.எச்.எஸ்.திட்டத்தில், பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனம் அரசாணைக்கு புறம்பாக, பேக்கேஜ் அடிப்படையில் 30 சதவீதத்திலிருந்து 40 சதவீத காப்பீட்டுத்தொகை வழங்கி வருகிறது.
மற்ற நிறுவனங்கள், 80 முதல் 100 சதவீதம் வரை, மருத்துவ காப்பீடு வழங்குகின்றன. இது முழுமையான பலனளிப்பதில்லை. இத்திட்டம் அரசு ஊழியர்களுக்கு பாதகமாக இருப்பதால், வேறு காப்பீட்டு நிறுவனங்களில், சில அரசு ஊழியர்கள் இணைந்துள்ளனர்.
அதனால் எதிர்வரும் ஆண்டுகளுக்கு, என்.ஐ.எச்.எஸ்.,திட்டத்தை புதுப்பிக்கும் முன், அரசு ஊழியர்களிடம், அரசு விருப்புரிமை கோர வேண்டும். அரசு ஊழியர் நலனுக்கு எதிரான என்.எச்.எஸ்., திட்டத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.