/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய பென்ஷன் திட்டம் எதிர்த்து அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
/
புதிய பென்ஷன் திட்டம் எதிர்த்து அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
புதிய பென்ஷன் திட்டம் எதிர்த்து அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
புதிய பென்ஷன் திட்டம் எதிர்த்து அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
ADDED : அக் 14, 2024 11:41 PM
கோவை : புதிய பென்ஷன் திட்டம் (சிபிஎஸ்) ஒழிப்பு இயக்கத்தின் சார்பில், மாவட்ட தலை நகரங்களில் உண்ணாவிர போராட்டம் நடத்தப்படும் என, மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்த, மாநில உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் மகாலிங்கம் கூறியிருப்பதாவது:
புதிய பென்ஷன் திட்ட ஒழிப்பு, மாநில உயர்மட்ட குழு முடிவின்படி, வரும் 24ம் தேதி, அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை இணைத்து, அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இதில் சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், மாவட்டங்களில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.