/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 23, 2025 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நேற்று, மதிய உணவு இடைவேளையின் போது நேற்று டாக்டர் பாலசுந்தரம் சாலையிலுள்ள வணிகவரித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்துதல், 21 மாதங்களுக்கு கால ஊதியக்குழு நிலுவைத்தொகையை பெறுதல், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்துவது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.