/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொள்ளைக்கு பின் அரசு ஊழியர்கள்... உஷார்! கூட்டம் நடத்தி சங்க நிர்வாகிகள் 'அலர்ட்'
/
கொள்ளைக்கு பின் அரசு ஊழியர்கள்... உஷார்! கூட்டம் நடத்தி சங்க நிர்வாகிகள் 'அலர்ட்'
கொள்ளைக்கு பின் அரசு ஊழியர்கள்... உஷார்! கூட்டம் நடத்தி சங்க நிர்வாகிகள் 'அலர்ட்'
கொள்ளைக்கு பின் அரசு ஊழியர்கள்... உஷார்! கூட்டம் நடத்தி சங்க நிர்வாகிகள் 'அலர்ட்'
ADDED : டிச 08, 2025 05:23 AM

கோவை:கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் தங்கம், வெள்ளி, ரொக்கம் கொள்ளை போன விவகாரம் தொடர்பாக, இனி மேலும் கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் இருக்க, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூட்டம் நடத்தி, குடியிருப்போருக்கு அறிவுரை வழங்கினர்.
கவுண்டம்பாளையத்திலுள்ள அரசு குடியிருப்பில், ஏ, பி1, பி2, சி1, சி2, சி3, சி4, டி ஆகிய எட்டு பிளாக்குகளில் மொத்தம், 1,848 வீடுகள் உள்ளன. அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை குடியிருக்கின்றனர்.
இங்கு, நவ.,28ல் 13 வீடுகளின் கதவுகளை உடைத்து, தங்கம், வெள்ளி நகை மற்றும் ரொக்கத்தை, உ.பி.,யை சேர்ந்த கொள்ளையர் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர் பிடிபட்டனர். இந்த சம்பவம், குடியிருப்புகளில் வசிப்போர் மத்தியில், பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பீதியை களைந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக, அரசு குடியிருப்போர் நலச்சங்க கூட்டம், நேற்று மாலை நடந்தது.
இதில் பேசிய சங்கத்தின் தலைவர் சண்முகம், ''பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில்,15 செக்யூரிட்டிகள் இருந்தும் பாதுகாப்பு குளறுபடி தொடர்கிறது.
ஒவ்வொரு பிளாக்கிலும் ஒவ்வொரு தளத்திலும் இருவேறு திசைகளில், சி.சி.டி.வி.,கேமரா பொருத்துவது அவசியம்.
மெயின் கேட்டில் நுழைவோரையும், வாகனங்களையும் கண்காணித்த பின்பே, செக்யூரிட்டிகள் அனுமதிக்க வேண்டும். இரவு 11 மணிக்கு கேட் மூடப்படும். அதற்கு பின் வருவோர், விசாரணைக்குப் பின்பே அனுமதிக்கப்படுவர். நுழைவாயிலில் புறக்காவல் நிலையம் அமைக்க, மாநகர போலீஸ் கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஆன்லைனில் பொருள் வாங்குவோர், உணவுபொருள் டெலிவரி செய்பவர்களை, கட்டடத்தின் மேல்தளத்துக்கு அனுமதிக்கக் கூடாது. டி பிளாக்கிலுள்ள சிறிய நுழைவாயிலை மூட வேண்டும்.
குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தும் வாகனம், குடியிருப்பு ஒதுக்கீட்டாளருடையது தானா என்பதை, ஊர்ஜிதம் செய்ய வேண்டும். வெளிவாகனங்களை வெளியேற்ற வேண்டும்,'' என்றார்.
சி.சி.டி.வி., கேமரா பொருத்த, பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்தனர். திரளான குடியிருப்போர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

