sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 'அரசு அலுவலர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்'

/

 'அரசு அலுவலர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்'

 'அரசு அலுவலர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்'

 'அரசு அலுவலர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்'


ADDED : நவ 26, 2025 07:17 AM

Google News

ADDED : நவ 26, 2025 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் உள்ள, மத்திய வனத்துறையின் கீழ் செயல்படும், மாநில வனப்பணிகளுக்கான மத்திய உயர் பயிற்சியகத்தில், மாநில வனப்பணி அலுவலர்களுக்கான 30வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது.

இங்கு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாநில வனப்பணி அலுவலர்களுக்கு ஆரம்ப கால 2 ஆண்டு பயிற்சி, வனச்சரக அலுவலர்களுக்கு, 18 மாத ஆரம்ப கால பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 1980ம் ஆண்டு துவங்கப்பட்டு, 2009ல் வன உயர் பயிற்சியகமாக தரம் உயர்த்தப்பட்ட இங்கு, இதுவரை, 1014 மாநில வனப்பணி அலுவலர்களும், 405 வனச்சரக அலுவலர்களும் பயிற்சி பெற்றுள்ளனர்.

30வது அணியாக, 11 பெண்கள் உட்பட 42 மாநில வனப்பணி அலுவலர்கள் பயிற்சி நிறைவு செய்து பட்டம் பெற்றனர்.

பட்டமளிப்பு விழாவில், டேராடூன், இந்திராகாந்தி தேசிய வனக் கல்லூரி இயக்குநர் பாரதி பேசுகையில், “இன்று பட்டம் பெறுபவர்கள், நாற்றுப்பண்ணையில் இருந்து வெளியேறும் நாற்றைப் போன்றவர்கள். உங்களின் வளர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்துக் கொள்ளாதீர்கள்; பெரு மரமாக கிளை விரியுங்கள். வனம் சார்ந்து மட்டுமல்ல, ஏ.ஐ., உட்பட என்னவெல்லாம் முடியுமோ, வாழ்வின் கடைசி நிமிடம் வரை கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் துறைக்கு மட்டுமல்லாது, சுற்றியிருப்பவர்களுக்கும் நல்லவர்களாக இருங்கள்,” என்றார்.

பட்டங்களை வழங்கி, மத்திய அரசின் தேசிய பல்லுயிர் ஆணைய தலைவர், விரேந்திர திவாரி பேசியதாவது:

இதுவரை கற்றது வெறும் தேற்றம்தான். களப்பணி வேறு. சூழல் ஒரே மாதிரியாக இருக்காது. இலக்குகளை எட்டுவதில் அரசின் நெருக்கடிகள் இருக்கும்.

அந்த சூழல்களை எதிர்கொள்ள வேண்டும். அதேசமயம் அரசு நடைமுறைகளில் இறுமாப்புடன் இருந்துவிடக்கூடாது. மாநிலப் பணிகளின்போது, துறை சார்ந்த தேர்வுகளை தவறவிடாதீர். முதன்முறையிலேயே வெற்றி பெற முயலுங்கள். அரசுத் துறையின் மீதான பொதுமக்களின் பார்வை அவ்வளவு நன்றாக இருக்காது. ஆனால், உங்களின் நடத்தையால், மக்களின் நம்பிக்கை, உடன் பணிபுரிவோரின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பயிற்சி அலுவலர்களின் புத்தகங்கள் மற்றும் 'கோவை டேஸ்' நினைவிதழ் வெளியிடப்பட்டது. பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பதக்கங்களும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன. உயர் பயிற்சியக முதல்வர் திருநாவுக்கரசு, வனக்கல்வி இயக்குநரக இயக்குநர் மீரா மற்றும் பயிற்சியக பேராசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us