தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு துவக்கப்பள்ளி அபாரம்

அரசு துவக்கப்பள்ளி அபாரம்

அரசு துவக்கப்பள்ளி அபாரம்


ADDED : செப் 04, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்: சூலூர் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகளில், நாகம நாயக்கன்பாளையம் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள், வெற்றி பெற்று அசத்தி உள்ளனர்.

சூலூர் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் ஆர்.வி.எஸ்., கல்லூரியில் நடந்தது. இதில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பிரிவு , மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடல் ஒப்புவித்தல், மாறுவேடம், குழு நாட்டுப்புற நடனம், ஆங்கில பேச்சு, கதை கூறுதல், தமிழ் பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், பாவனை நடிப்பு பரதநாட்டியம் உள்ளிட்ட போட்டிகளில், நாகம நாயக்கன் பாளையம் துவக்க பள்ளி மாணவர்கள், ஆறு முதல் இடங்களையும், மூன்று இரண்டாம் இடங்களையும், இரு இரண்டாம் இடங்களை பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களுக்கு, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us