/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு துவக்கப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது
/
அரசு துவக்கப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது
ADDED : நவ 29, 2024 06:55 AM
அன்னுார்; குமரகவுண்டன்புதூர், அரசு துவக்கப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது.
கஞ்சப்பள்ளி ஊராட்சி, குமர கவுண்டன் புதூர் துவக்கப் பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி கட்டடம் மற்றும் வளாகம் கோவை ரோட்டரி ஜெனித் சங்கம் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த விழாவில், ஆனைமலை டொயோட்டா நிறுவனத் துணைத் தலைவர் ராஜன் ஆறுமுகம் புதுப்பிக்கப்பட்ட பள்ளியை திறந்து வைத்தார். ரோட்டரி சங்கத் தலைவர் வசந்த் சண்முகம், செயலாளர் மதனகோபால், பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கல்விக் குழு சார்பில், பள்ளியை புதுப்பித்த ரோட்டரி சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.