/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்மார்ட் போனை பயனுள்ளதாக மாற்றிய அரசுப்பள்ளி மாணவர்
/
ஸ்மார்ட் போனை பயனுள்ளதாக மாற்றிய அரசுப்பள்ளி மாணவர்
ஸ்மார்ட் போனை பயனுள்ளதாக மாற்றிய அரசுப்பள்ளி மாணவர்
ஸ்மார்ட் போனை பயனுள்ளதாக மாற்றிய அரசுப்பள்ளி மாணவர்
ADDED : ஜன 04, 2026 05:30 AM

காகிதங்களை கொண்டு கலைவண்ணம் படைத்து வருகிறார், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பிஷப் உபகாரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவர் ஜெகத்ரட்சகன். ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் இம்மாணவன், ஒரிகாமியில் (Origami) திறமை பெற்று விளங்குகிறார்.
அதென்ன 'ஒரிகாமி?' ஜப்பானில் தோன்றி புகழ்பெற்ற 'ஒரிகாமி' என்பது, காகிதங்களை வெட்டாமலும், ஒட்டாமலும் வெறும் மடிப்புகள் மற்றும் வளைவுகளை மட்டுமே கொண்டு, உருவங்களை உருவாக்கும் நுட்பமான கலையாகும்.
இந்த கலையின் மூலம் மிக அழகிய பூக்கள், விதவிதமான விலங்குகள், பறவைகள் மற்றும் பெட்டிகள் போன்ற 2டி மற்றும் 3டி உருவங்களை அசத்தலாக வடிவமைக்கிறார்.
மாணவன் ஜெகத்ரட்சகன் கூறுகையில், ஆரம்பத்தில் ஸ்மார்ட்போனில் வீடியோ பார்த்து விளையாட்டாகத்தான் இந்த கலையை செய்ய தொடங்கினேன்.
வீட்டில் இருந்த பழைய காகிதங்களை கொண்டு பல்வேறு உருவங்களை செய்து பார்த்தேன். இதில் நல்ல தேர்ச்சி கிடைத்துள்ளது. நான் கற்றுக்கொண்ட இந்த கலையை நண்பர்களுக்கும் கற்றுக்கொடுத்து வருகிறேன், என தெரிவித்தார்.
பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், இக்கால குழந்தைகள் மிகச் சிறிய வயதிலேயே கைப்பேசி பயன்படுத்த தொடங்குகின்றனர். ஆனால், அதை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்துபவர்கள் மிகக் குறைவு. ஸ்மார்ட்போனை நல்ல முறையில் பயன்படுத்தி, அதன் மூலம் சுயமாக 'ஒரிகாமி' கலையை கற்றுக்கொண்டது பாராட்டுக்குரியது, என்றார்.

