/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அசத்திய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அசத்திய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அசத்திய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அசத்திய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 10, 2025 02:41 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் அசத்திய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் அரசுப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வெழுதிய, 74 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி வேதிகா, 529 மதிப்பெண்களும், மாணவி தீபிகா, 519 மதிப்பெண்களும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் தமீஸ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
* ஆனைமலை வி.ஆர்.டி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 249 மாணவியர் தேர்வு எழுதினர். அதில், 94 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மொத்தம், 29 மாணவியர், 500க்கு மேல் மதிப்பெண் பெற்றனர்.
மேலும், மாணவி பாசிலா, 583 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். மாணவிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் சுமதி, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.