ADDED : பிப் 15, 2024 07:07 AM
ஊட்டி : மூன்று நாள் பயணமாக கவர்னர் ரவி இன்று ஊட்டி வருகிறார்.
தமிழக கவர்னர் ரவி இன்று ஊட்டி வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம், மதியம், 2:30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். பின், கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு மாலை, 6:15 மணிக்கு வருகிறார். அன்றைய தினம் ராஜ்பவனில் தங்கி ஓய்வு எடுக்கிறார். 16ம் தேதி ஊட்டி அடுத்த முத்தநாடு மந்தில் உள்ள தோடர் இன பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார். 17ம் தேதி ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, 18-ந் தேதி காலை, 9:00 மணியளவில் ராஜ் பவனில் இருந்து கார் மூலம் கிளம்பி கோவைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
கவர்னர் வருகையை ஒட்டி, நுாற்று கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கவர்னர் மாளிகை உள்ள, தாவரவியல் பூங்கா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

