/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அர்ஜூன் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
அர்ஜூன் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 29, 2025 09:23 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, தாமரைக்குளத்தில் உள்ள அர்ஜூன் தொழில்நுட்ப கல்லுாரியில், 8வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரியின் மேலாண்மை அறங்காவலர் சீனிவாசன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஜானகி, ஆண்டு அறிக்கை படித்தார். கல்லுாரி தலைவர் சூரிய நாராயணன் தலைமை வகித்தார்.
வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராமசாமி பேசினார். தகவல் தொழில்நுட்ப தலைவர் மோகன்பாபு பாலச்சந்திரன், தொழில் துறை குறித்து பேசினார். மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லுாரி அறங்காவலர்கள் ராஜா, அஸ்வின் துவாரகேஷ், செயலாளர் சுரேஷ்குமார், நிதி இயக்குனர் பரமசிவம், மாணவர்கள் பங்கேற்றனர். மனிதவள மேம்பாட்டு இயக்குனர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.