/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சிம்ஸ்' கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
'சிம்ஸ்' கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 17, 2025 12:09 AM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை (சிம்ஸ்) கல்லுாரியில், 11வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவை, கல்லுாரிப் பொருளாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார். கல்லுாரி இயக்குனர் சர்மிளா ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக, பேராசிரியர் தியாகு வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கரூர் ஸ்ரீரங்கா பாலிமர்ஸ் நிறுவன மேலாண்மை பங்குதாரர் செந்தில்சங்கர் கலந்து கொண்டு பேசுகையில், ''பட்டம் பெறும் மாணவர்கள் தொழில் முனைவோராக உயரவேண்டும். பெற்றோர் வழங்கியுள்ள சுதந்திரத்தை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். புதிய தொழில் துவங்கும் முன், புரிதலும் அனுபவமும் அவசியம்,'' என்றார்.
விழாவில், நுாறு மாணவர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் பாலாஜிவிக்னேஷ், கல்லுாரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.