/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அக்., 2ல் கிராமசபா ஒத்திவைப்பு
/
அக்., 2ல் கிராமசபா ஒத்திவைப்பு
ADDED : செப் 30, 2025 12:33 AM
- நமது நிருபர் -
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆறு கிராம கிராமசபாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தந்த கிராம மக்கள், கிராமசபா கூட்டங்களில் பங்கேற்று, தங்கள் கிராம வளர்ச்சி, பிரச்னைகள் தொடர்பாக தெரிவிக்கின்றனர்.
பல்வேறு அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. வரும் அக். 2ம் தேதி, காந்தி ஜெயந்தி நாள் கிராமசபா நடத்தப்பட வேண்டும்.
வரும் 1ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை; 2 ம் தேதி, விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி என அடுத்தடுத்து இரண்டு நாட்கள் விடுமுறை தினங்கள் வருகின்றன.
தொடர் விடுமுறை, பண்டிகை கொண்டாட்டத்துக்காக பெரும்பாலான பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவேண்டியுள்ளதால், கிராமசபாவை வேறு நாளில் நடத்தவேண்டும் என, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம், ஊராட்சி செயலாளர் சங்கங்கள் சார்பில், ஊரகவளர்ச்சித்துறை கமிஷனரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, வரும் அக். 2 காந்தி ஜெயந்தி நாள் கிராமசபாவை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.