நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிலாளர் தினத்தன்று ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடக்கிறது.
தொழிலாளர் தினமான வரும் மே 1ம் தேதி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், கிராமசபா கூட்டம் நடைபெற உள்ளது.
கிராம சபாவில், ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்படும். ஆன்லைனில் மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல்; சுய சான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கல், வரி மற்றும் வரியில்லாத வருவாய் இனங்களை ஆன்லைனில் செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் முக்கியமான தேவைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பங்கேற்று, ஊராட்சியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்கலாம்.
- நமது நிருபர் -