/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாடிய தாத்தா, பாட்டிகள் பேரன், பேத்திகள் உற்சாகம்
/
விளையாடிய தாத்தா, பாட்டிகள் பேரன், பேத்திகள் உற்சாகம்
விளையாடிய தாத்தா, பாட்டிகள் பேரன், பேத்திகள் உற்சாகம்
விளையாடிய தாத்தா, பாட்டிகள் பேரன், பேத்திகள் உற்சாகம்
ADDED : அக் 07, 2025 12:24 AM

சூலுார்:சூலுார் பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயாவில், தாத்தா, பாட்டி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ராதா வெங்கடேஷன் வரவேற்றார். மழலை மற்றும் ஆரம்ப பள்ளி குழந்தைகள், மெல்லிசை பாடல்களுக்கு நடனமாடி, தங்களது தாத்தா, பாட்டிகள் மற்றும் பார்வையாளர்களை கவர்ந்தனர். தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் குறித்து, குழந்தைகள் தங்களின் மழலை குரலில் பேசி அசத்தினர்.
தொடர்ந்து, தாத்தா, பாட்டிகளுக்கான விளையாட்டு போட்டிகளில், அவர்கள் ஓடியாடி விளையாடியதை, பேரன், பேத்திகள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு, முதல்வர் ராகேஷ் குமார் பரிசுகளை வழங்கி பேசுகையில், தாத்தா, பாட்டிகள் குடும்பத்தின் வலுவான அடித்தளம். அவர்களை கவுரவிக்கவே இந்த விழா நடத்தப்படுகிறது, என்றார். மூத்த ஆசிரியை சுதா நன்றி கூறினார்.